2020ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அலுவல் நாட்கள் எத்தனை?

நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்து வருவது குறித்து பலதரப்பிலும் வருத்தங்களும், கண்டனங்களும் எழுந்து வரும் நிலையில், 2020ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் எத்தனை நாட்கள்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புது தில்லி: நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்து வருவது குறித்து பலதரப்பிலும் வருத்தங்களும், கண்டனங்களும் எழுந்து வரும் நிலையில், 2020ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் எத்தனை நாட்கள் இயங்க உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் 190 நாட்கள் இயங்க உள்ளதாக அதன் காலண்டர் தெரிவிக்கிறது. அதேப்போல, மும்பை, தில்லி, குவகாத்தி மற்றும் மணிப்பூர் உயர் நீதிமன்றங்கள் இந்த 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக 210 நாட்கள் பணியாற்ற உள்ளன.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நீதிமன்றங்களுக்கு நீண்ட கால விடுமுறை அறிவிப்பே இன்னும் நடைமுறையில் உள்ளது.

சிக்கிம் உயர் நீதிமன்றம் 174 நாட்கள் மட்டுமே பணியாற்றும், மிச்சமுள்ள 192 நாட்களும் நீதிமன்றத்துக்கு விடுமுறை. இந்த நீதிமன்றத்தின் சராசரி அலுவல் நாட்கள் என்றால் அது மாதத்துக்கு 15 நாட்கள்தான்.

உச்ச நீதிமன்றத்துக்கு 2020ல் விடுமுறை நாட்கள் எவ்வளவு தெரியுமா? 176 நாட்கள். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் சராசரி அலுவல் நாட்கள் என்றால் அது மாதத்துக்கு 16 நாட்கள்தான். உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 5 முறை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. இதில், கோடைக்கால விடுமுறையாக 45 நாட்களும், ஹோலி பண்டிகைக்கு ஒரு வார கால விடுமுறையும், குளிர் காலத்தில் 15 நாட்களும், தீபாவளி மற்றும் தசராவுக்கு 10 நாட்கள் விடுமுறையும் அடங்கும்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் பலரும், உச்ச நீதிமன்றம் 365 நாட்களும் இயங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாலும், அதற்கு வழக்குரைஞர்கள் ஒப்புக் கொள்வதில்லை. 

ஒரு பக்கம், நிலுவை வழக்குகள் அதிகமாக இருப்பதால், சனிக்கிழமைகளிலும் பணியாற்ற உயர் நீதிமன்றங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், அதிகப்படியான விடுமுறை நாட்களுக்கு எந்த வகையிலும் உயர் நீதிமன்றங்களால் ஓய்வு கொடுக்க முடியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com