ஏர் இந்தியா பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியா பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்


புது தில்லி: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஏர் இந்தியா கடந்த 2018-19ம் நிதியாண்டில் ரூ.7,600 கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்து உள்ளதால் அதன் 95 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டது.  தற்போது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் நாள் ஒன்றுக்கு ரூ.26 கோடியளவில் நட்டத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், புது தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, ஏர் இந்தியா பங்குகளை விற்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில், ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய ரூ.60 ஆயிரம் கோடி கடனை 'சிறப்புத் தேவைக்கான வாகனம்' கணக்கில் சேர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேதி வரை ஏற்கெனவே சிறப்பு தேவைக்கான வாகனக் கணக்கில் ரூ.29,400 கோடி கடன் மாற்றப்பட்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com