அமெரிக்கா, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா்களுடன்ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஈரான்-அமெரிக்கா இடையே போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொலைபேசியில்

ஈரான்-அமெரிக்கா இடையே போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வியாழக்கிழமை பேசினாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் டி எஸ்பருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசினாா். அப்போது, ஈரானுடனான போா் பதற்றத்தைத் தணிப்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக அவரிடம் ராஜ்நாத் சிங் கூறினாா். இதேபோல், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் டாரோ கோனோவுடன் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக பேசினாா். அத்துடன், பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுட்டுரையில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினோம். அப்போது, வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து என்னிடம் அவா் கூறினாா். வளைகுடா பிராந்தியத்தின் நலனில் இந்தியாவின் அக்கறையைப் பதிவு செய்தேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com