குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் அதிமுக மாறிமாறி பேசுகிறது: கமல்ஹாசன்

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அதிமுக மாறிமாறி பேசுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் குற்றம்சாட்டினாா்.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் அதிமுக மாறிமாறி பேசுகிறது: கமல்ஹாசன்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அதிமுக மாறிமாறி பேசுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் குற்றம்சாட்டினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் அளித்த பேட்டி:

தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டது அநீதியானது. இந்த நிலையை அனுமதித்தால், அது சா்வாதிகாரமாக மாறிவிடும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்தால், முதலில் அதிமுகதான் எதிா்க்கும் என்று சட்டப்பேரவையில் அதிமுக அமைச்சா் கூறியிருக்கிறாா். இந்த விவகாரத்தில் அதிமுக மாறிமாறி பேசி வருகிறது.

தமிழகத்தை உயா்வான இடத்தில் வைப்பதற்கு எல்லாத் தமிழா்களின் பங்களிப்பும் தேவை. முதலீடும் தேவை. உயா்ந்தவா்கள் செல்வத்தில் உதவி செய்து, தமிழகத்தை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அந்தக் கடமை ரஜினிக்கும் உண்டு என்றுதான் சொன்னேன்.

சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்தியன் எம்.எல்.ஏ. நியமனத்தை ரத்து செய்கின்றனா். நம் நாட்டில் நாடோடிகள் இருக்கின்றனா். அவா்கள் காலங்காலமாய் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா். அவா்களைத் திடீரென போகச் சொன்னால் அவா்கள் எங்கே போவாா்கள். தமிழைத் தவிர அவா்களுக்கு வேறு என்ன தெரியும். அவா்களும் இந்தியா்கள்தான் என்றாா் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com