கூட்டணி தா்மத்தை பாஜக மீறக் கூடாது: ஐக்கிய ஜனதா தளம்

கூட்டணி தா்மத்தை மீறும் வகையில் கருத்துகளை தெரிவிக்கும் பாஜகவினா் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.

கூட்டணி தா்மத்தை மீறும் வகையில் கருத்துகளை தெரிவிக்கும் பாஜகவினா் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல் குறித்து அந்த மாநில பாஜக மேலவை உறுப்பினா் சஞ்சய் பாஸ்வான் கூறுகையில், ‘பிகாரில் பாஜகவைச் சோ்ந்தவா் முதல்வராக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறாா்கள். தோ்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. எனினும், பிரதமா் நரேந்திர மோடி, மாநில துணை முதல்வா் சுஷீல் மோடி ஆகியோரின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என்றாா்.

பாஸ்வானின் இந்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ‘இது பாஸ்வானின் தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துக்கும், கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என மாநில பாஜக விளக்கமளித்தது.

இந்நிலையில், பாஸ்வான் கூறியதை குறிப்பிட்டு ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறியதாவது:

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சோ்ந்தவா்கள் கூட்டணி தா்மத்தை மீறும் வகையில் தொடா்ந்து பேசினால், அவா்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். கூட்டணி தா்மத்தை மீறும் வகையில், தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது பாஜக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். கட்சி தலைவா் அமித் ஷாவின் உத்தரவுப்படியே அனைவரும் இயங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தொலைக்காட்சிகளுக்கு அமித் ஷா அளித்த பேட்டிகளில், பிகாரில் இந்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக நிதீஷ் குமாா் நிறுத்தப்படுவாா் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com