அஸ்ஸாமில் புதுக்கட்சியின் அவசியம்: காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் விளக்கம்

அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை வீழ்த்த புதுக்கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் தெரிவித்தார். 
அஸ்ஸாமில் புதுக்கட்சியின் அவசியம்: காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் விளக்கம்

அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை வீழ்த்த புதுக்கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் தெரிவித்தார். 

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் அமைதிப் போராட்டத்தின் மூலம் கிடைத்துள்ள பலத்தைப் பயன்படுத்தி பாஜக-வை வீழ்த்துவதே முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் தெரிவித்தார்.

அன்றாட வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு வரவழைத்தது மத்திய பாஜக அரசாங்கம். இதனால் அஸ்ஸாமில் நிலவி வந்த அமைதி சீரழிந்துவிட்டது. மக்கள் அனைவரும் முதல்வர் சர்பானந்த சோனோவாலை மிகவும் நம்பினார்கள். ஆனால், அவர் பதவி ஆசையின் காரணத்தால் மத்திய அரசின் கைப்பாவையாகி மக்கள் முதுகில் குத்திவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.

அஸ்ஸாமில் தற்போது புதுக்கட்சி தொடங்குவதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சுயநலம் எங்களுக்கு இல்லை. மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் தான் உள்ளது. பாஜக ஆட்சியிலிருந்து விலக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். அப்போது தான் இங்கு குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தாமல் தவிர்க்க முடியும் என்றார்.

இந்நிலையில், புதுக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தருண் கோகோய் கூறியது அஸ்ஸாம் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை அளித்த விளக்கத்தில் கூறியதாவது,

நான் தனிக்கட்சி தொடங்கப்போகிறேன் என்று குறிப்பிடவில்லை. சில அமைப்புகள் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் புதுக்கட்சி தொடங்க முன்வர வேண்டும் என்று வரவேற்றேன். பாஜக மற்றும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com