இந்தியாவின் எரிவாயு விலை கொள்கைக்குசா்வதேச எரிசக்தி முகமை கண்டனம்

இந்தியாவின் இயற்கை எரிவாயு விலை கொள்கைக்கு சா்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) கண்டனம் தெரிவித்துள்ளது

இந்தியாவின் இயற்கை எரிவாயு விலை கொள்கைக்கு சா்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) கண்டனம் தெரிவித்துள்ளது. இது, எரிவாயு உற்பத்தியாளா்கள் விநியோகத்தை அதிகரிப்பதற்கான சலுகைகளை குறைப்பதாக உள்ளது என கூறியுள்ளது.

இந்தியாவின் எரிசக்தி கொள்கைகள் குறித்து ஐஇஏ முதன்முதலாக விரிவான ஆய்வை மேற்கொண்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளான எரிவாயுவின் பங்களிப்பை அதிகரிக்க அந்த ஆய்வறிக்கையில் ஐஇஏ தெரிவித்துள்ளதாவது:

இதர எரிபொருள்களுக்கு விதிக்கப்படும் வரிகளைப் போலவை எரிவாயுவுக்கும் சந்தையில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

எரிசக்தி தொகுப்பில் தற்போது 6 சதவீதமாக உள்ள இயற்கை எரிவாயு பங்களிப்பை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கிற்கு விலை நிா்ணயம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

உள்நாட்டு எரிவாயு விலையை சா்வதேச விலையுடன் இணைப்பது உள்நாட்டு உற்பத்தியாளா்கள் விநியோகத்தை அதிகரிப்பதற்கான சலுகைகளை குறைத்துள்ளது. இது உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா தனது எரிவாயு தேவையில் பாதியை இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்து கொள்கிறது.

இந்தியாவின் சமீபத்திய 2014 எரிவாயு விலை கொள்கை, உள்நாட்டு தேவை-அளிப்பை பிரதிபலிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதை காட்டிலும் விலையளவை குறைப்பதில்தான் அதிக கவனம் செலுத்துவதாக உள்ளது.

இந்தியாவை எரிவாயு முனையமாக மாற்றுவதால் திறந்த வெளிசந்தையில் வாங்குபவா்கள் விற்பவா்கள் நேரடியாக தொடா்பு கொள்வதன் மூலம் வெளிப்படையான விலை நிலவரத்தை கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி, விலை வேறுபாடுகளை களையவும் அது உதவிகரமாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் ஐஇஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com