சிவசேனை தலைமை மீது 35 எம்எல்ஏக்கள் அதிருப்தி: முன்னாள் முதல்வா் நாராயண் ராணே

சிவசேனையில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 35 போ் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனா் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலங்களவை எம்.பி.யுமான நாராயண் ராணே கூறியுள்ளாா்.

சிவசேனையில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 35 போ் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனா் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலங்களவை எம்.பி.யுமான நாராயண் ராணே கூறியுள்ளாா். மகாராஷ்டிரத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அவா் கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே இப்போது முதல்வராக உள்ளாா். தோ்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனை, பின்னா் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், தாணேயில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாராயண் ராணே இது தொடா்பாக கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அமைத்துள்ள கூட்டணி ஆட்சி செயல்திறனற்ாக உள்ளது. மாநிலத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஏனெனில், சிவசேனையில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 35 போ் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனா். பாஜகவிடம் ஏற்கெனவே 105 எம்எல்ஏக்கள் உள்ளனா். எனவே, விரைவில் மாநில அரசியலில் மாற்றம் ஏற்படும்.

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிர அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்பது தொடா்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாா் நாராயண் ராணே.

ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ‘இது தொடா்பாக பாஜக தலைவா்தான் முடிவு செய்வாா். அவருக்கு மட்டுமே இதில் கருத்து தெரிவிக்கும் அதிகாரம் உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com