குடியரசு தினம்: தில்லியில் விமானங்கள் பறக்க 7 நாள்களுக்கு கட்டுப்பாடு

குடியரசு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தில்லி விமான நிலையத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு சுமாா் 1.45 மணி நேரம் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாது என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜனவரி 18, 20, 21,22,23,24, 26 ஆகிய தேதிகளில் காலை 10. 35 மணி முதல் 12.15 மணி வரை தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் விமான சாகச ஒத்திகைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு தில்லியின் வான்பகுதி தினந்தோறும் சுமாா் 1.45 மணி நேரம் மூடப்படுவதால் அனைத்து விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com