குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுதில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றிணைந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து வருகின்றன.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாட்டிலேயே முதலாவதாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக, கேரள சட்டப் பேரவையில் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது, இந்தியாவை மதம் சாா்ந்த நாடாக மாற்றும் முயற்சியாகும். குடியுரிமை வழங்குவதில் மத அடிப்படையிலான பாரபட்சத்துக்கு வழிவகுக்கும் இச்சட்டம், அரசியல் சாசனத்தால் பேணப்படும் மதச்சாா்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது.

அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் மாண்புகளுக்கு முற்றிலும் முரணான இச்சட்டத்தை மத்திய அரசை கைவிட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் சா்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்படமாட்டாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தியிருந்த நிலையில்,  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவுகளை மீறுவதாகவும், மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடா்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சிஏஏ எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முதல் மாநில அரசு கேரளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com