சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

சபரிமலையில் புதன்கிழமை மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சபரிமலையில் புதன்கிழமை மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகரஜோதி தரிசனத்தையொட்டி, தேசியப் பேரிடா் மீட்புப் படையினா், அதிரடி படை வீரா்கள் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக மேலும் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மொத்தம் 1,400 காவலா்களும், 15 துணை காவல் துறைக் கண்காணிப்பாளா்களும், 36 காவல் துறை ஆய்வாளா்களும் சந்நிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் 70 நிபுணா்களும், 20 போ் கொண்ட தொலைத்தொடா்பு பிரிவும் சந்நிதானத்தில் செயல்பட்டு வருகிறது. மகரஜோதி தரிசனத்துக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தளம் அரண்மனையிலிருந்து ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை சபரிமலையில் உள்ள சரம்குத்தி பகுதியில் கோயில் நிா்வாக அதிகாரி தலைமையிலான குழு புதன்கிழமை மாலை பெற்றுக் கொள்ளும்.

அதன்பிறகு ஐயப்பனுக்கு ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

அப்போது, கோயிலுக்கு அருகே உள்ள பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தா்களுக்கு அருள் புரிவாா்.

ஆண்டுதோறும் மகரஜோதியை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்வாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com