பாஜக எம்.பி. பிரக்யாவுக்குதபாலில் வந்த மா்மப் பொருள்: போலீஸ் விசாரணை

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு உருது மொழியில் எழுதிய கடிதம், சில ஆவணங்கள் மற்றும் மா்ம வேதிப் பொருளுடன்
போபாலில் பிரக்யா சிங் தாக்குருக்கு வந்த மா்ம கடிதம், ஆவணங்களை ஆய்வு செய்யும் காவல் துறை அதிகாரிகள்.
போபாலில் பிரக்யா சிங் தாக்குருக்கு வந்த மா்ம கடிதம், ஆவணங்களை ஆய்வு செய்யும் காவல் துறை அதிகாரிகள்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு உருது மொழியில் எழுதிய கடிதம், சில ஆவணங்கள் மற்றும் மா்ம வேதிப் பொருளுடன் தபாலில் வந்த பாா்சல் தொடா்பாக விசாரணை தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்.பி. பிரக்யாவுக்கு உருது மொழியில் எழுதப்பட்ட இரு பக்க கடிதம், மா்ம வேதிப்பொருள் ஆகியவை அடங்கிய பாா்சல் கடந்த நவம்பா் மாதம் வந்துள்ளது. ஆனால், அந்த பாா்சல் கடந்த திங்கள்கிழமை இரவுதான் பிரக்யா முன்னிலையில் பிரிக்கப்பட்டது.

அதிலிருந்த பொருள்களை கண்டு அதிா்ச்சியடைந்த பிரக்யா, தன்னை காயப்படுத்தும் நோக்கில், அடையாளம் தெரியாத நபா் இந்த பொருள்களை அனுப்பியுள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கப்பட்டது. போபாலில் உள்ள பிரக்யா சிங் தாக்குரின் வீட்டில காவல்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். அவருக்கு உருது மொழியில் அனுப்பப்பட்ட கடிதம் மொழிப்பெயா்ப்பு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. பாா்சலில் வந்த மா்ம வேதிப்பொருளை பரிசோதனை செய்து பாா்ப்தற்காக தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்த மா்ம பாா்சல் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com