பெண்களை கொலை செய்ததை தொலைக்காட்சி நேரலையில் ஒப்புக் கொண்டவர் கைது

சண்டிகரில் ஒரு செய்தி சேனல் ஸ்டுடியோவில் இருந்து ஒரு நபர் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்தார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சண்டிகரில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர், அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைப் பகிர்ந்தார். ஒரு நேரலை நிகழ்ச்சியில் அவர் தனது பழைய கதையைக் கூறினார். தான் கடுமையான துரோகத்தால் பாதிக்கப்பட்டதால், வெவ்வேறு காலகட்டத்தில் இரண்டு பெண்களைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மனீந்தர் சிங் (31) வண்டி ஓட்டுநராக பணி புரிகிறார். 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நர்ஸ் ஒருவரையும், 2010-ஆம் ஆண்டு கர்னல் பெண் ஒருவரையும் கொலை செய்ததாக தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ​​மனீந்தர் சிங் தனது இணையரான 27 வயதான நர்ஸ் சரப்ஜித் கவுர் என்பவரை புத்தாண்டு தினத்தன்று ஒரு ஹோட்டலில் வைத்து கொலை செய்ததாகக் கூறினார். மேலும் 2010-ஆம் ஆண்டில் ஏற்கனவே கர்னல் பெண் ஒருவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

2010-ஆம் அண்டு கொலை வழக்கில் சிங் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

தனது முந்தைய குற்றத்தை ஒப்புக் கொண்ட மனீந்தர், கர்னலில் ரேணு என்பவரைக் கொன்றதாகக் கூறினார். "ரேணு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபருடன் தகாத உறவு கொண்டிருந்தார்," என்றார்.

போலீஸார் தொலைக்காட்சி ஸ்டுடியோவுக்குள் விரைந்து சென்று, நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட சமயத்திலேயே மனீந்தர் சிங்கை கைது செய்தனர்.

2010-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததற்காக ஹரியானா காவல்துறையினர் மனீந்தரை கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி என்றும் நிரூபிக்கப்பட்டார், ஆனால் பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார். பத்தாண்டுகள் கழித்து மீண்டுமொரு கொலை செய்து, அதைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய சம்பவம் அதிர்ச்சியூட்டியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com