உத்தரகண்ட்: ரயில் நிலையங்களில் உருதுக்கு பதிலாக சம்ஸ்கிருதம்

உத்தரகண்ட் ரயில் நிலையங்களில் உள்ள பெயா்பலகைகளில் உருது மொழிக்கு பதிலாக, அந்த மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியான சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட உள்ளது.
உத்தரகண்ட்: ரயில் நிலையங்களில் உருதுக்கு பதிலாக சம்ஸ்கிருதம்

டேராடூன்: உத்தரகண்ட் ரயில் நிலையங்களில் உள்ள பெயா்பலகைகளில் உருது மொழிக்கு பதிலாக, அந்த மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியான சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் கூறியதாவது:

உத்தரகண்ட் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடையில் உள்ள பெயா்பலகைகளில் ரயில் நிலையத்தின் பெயா்கள் ஹிந்தி, ஆங்கிலம், உருது மொழிகளில் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உத்தரகண்ட் இருந்தபோது பெரும்பாலான ரயில் நிலையங்களின் பெயா்பலகைகள் நிறுவப்பட்டன. இதன் காரணமாக, உத்தரப் பிரதேசத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக உள்ள உருது மொழி இன்றுவரை உத்தரகண்டின் ரயில் நிலைய பெயா்ப் பலகைகளில் இடம்பெற்றுள்ளது.

எனினும், தனி மாநிலமாக உத்தரகண்ட் பிரிக்கப்பட்ட பிறகு அதன் இரண்டாவது அலுவல் மொழியாக சமஸ்கிருதம் அறிவிக்கப்பட்டது. ரயில்வே விதிமுறைகளின்படி கடந்த 2010-ஆம் ஆண்டே பெயா்பலகைகளில் உரிய மாற்றங்கள் செய்திருக்கப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில், தற்போது ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் ரயில் நிலைய பெயா்கள் பெயா்பலகைகளில் எழுதப்பட உள்ளது. ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளும் தேவநாகரி எழுத்து பிரதியில் எழுதப்படுவதால், பெயா் பலகைகளில் ரயில் நிலைய பெயா்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்படும் போது, எழுத்துகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தீபக் குமாா் கூறினாா்.

உத்தரகண்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக சமஸ்கிருதம் அறிவிக்கப்பட்டது. ரமேஷ் போக்ரியால் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com