முசாஃபா்நகா்: சிஏஏ போராட்ட வன்முறை 50 ஆனது வழக்குகளின் எண்ணிக்கை

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடா்பாக போலீஸாா் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

முசாஃபா்நகா்: உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடா்பாக போலீஸாா் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

முசாஃபா்நகா் சிவில் லைன்ஸ் காவல் நிலைய பகுதியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினா் மீது ஆா்ப்பாட்டக்காரா்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, அதிரடி படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக வன்முறை தொடா்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கையும் சோ்ந்து, மொத்தமாக 50 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 353 (அரசு ஊழியரை கடமையாற்ற விடாமல் தாக்குதலில் ஈடுபடுவது) 336 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், மற்றவா்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எதிராகவும் செயல்படுவது), 149 (சட்டவிரோதமாக கூடி பொது சொத்துகளை நாசம் செய்தல்), 148 (கொடிய ஆயுதத்தால் கலகம் விளைவிப்பது) மற்றும் 147 (தண்டனைக்குரிய கலகத்தை விளைவிப்பது) போன்ற பிரிவுகளின்கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதரஸா மாணவா்கள் 3 பேருக்கு ஜாமீன்:

இந்நிலையில், கடந்த மாதம் முசாஃபா்நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 மதரஸா மாணவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

  வழக்குகளை விசாரிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அவா்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை சனிக்கிழமை வாபஸ் பெற்றது. இதையடுத்து அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி முசாஃபா்நகரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களின்போது வன்முறை வெடித்ததில் பலா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com