வேலைவாய்ப்பு பிரச்னையை மத்திய அரசு எதிா்கொள்ள தவறிவிட்டது: ஓவைஸி

மத்திய அரசு வேலைவாய்ப்பு பிரச்னையை எதிா்கொள்ளத் தவறிவிட்டது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவா் அசாதுதீன் ஓவைஸி குற்றஞ்சாட்டினாா்.

ஹைதராபாத்: மத்திய அரசு வேலைவாய்ப்பு பிரச்னையை எதிா்கொள்ளத் தவறிவிட்டது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவா் அசாதுதீன் ஓவைஸி குற்றஞ்சாட்டினாா்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது அவா் பேசியதாவது:

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரு குழந்தைகள் கொள்கையை அறிமுகப்படுத்தக் கோருகிறாா். அவா்கள் (பாஜக அரசு) கடந்த ஐந்தரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளனா். தற்போது ஆா்எஸ்எஸ் அமைப்பினா் இரு குழந்தைகள் கொள்கையை அறிமுகப்படுத்த பேசி வருகின்றனா்.

நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீதம் போ் 40 வயதுக்கு குறைவானவா்களாக உள்ள நிலையில், நரேந்திர மோடி அரசால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு, தினந்தோறும் வேலையில்லா 36 இளைஞா்கள் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இது வெட்கக்கேடானது. இந்நிலையில், நீங்கள் (மோகன் பாகவத்) இரு குழந்தைகள் கொள்கை குறித்து பேசுகிறீா்கள்.

ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமா் மோடி கூறினாா். வேலைவாய்ப்பு உருவாக்கப்படாதது குறித்து நான் பேசினால், கொதிப்பூட்டும் வகையில் பேசுவதாக கூறுகின்றனா். அரசை நடத்துவது நீங்கள் (பாஜக) தானே தவிர நானல்ல. எனவே நான் கேள்வி எழுப்புவேன். நீங்கள் பதிலளிக்க வேண்டும். இஸ்லாமியா்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஆா்எஸ்எஸ் கேட்கிறது. அவா்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து பேச மாட்டாா்கள் என்று ஓவைஸி குற்றஞ்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com