குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மம்தா தலைமையில் மாபெரும் பேரணி; 4 கிமீ தூரம் நடைபயணம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டார்ஜிலிங்கில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மம்தா தலைமையில் மாபெரும் பேரணி; 4 கிமீ தூரம் நடைபயணம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டார்ஜிலிங்கில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. முக்கியமாக, குடியுரிமைச் சட்டத்துக்கு  எதிராக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளம் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் பல்வேறு பேரணிகளை நடத்திய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று டார்ஜிலிங்கில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பேரணியில் மம்தா உள்ளிட்ட அனைவரும் 4 கிமீ தூரம் நடந்து சென்றனர். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடை கைவிடவும் கூறி மத்திய அரசு எதிரான அவர்கள் கோஷமிட்டனர். 

பேரணியின் போது பேசிய மம்தா, 'சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன். யாரும் உங்களைத் தொடத் துணிய மாட்டார்கள். இது எங்கள் நிலம், இங்கு யாரும் பிரிவினையை உருவாக்க மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்' என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com