இந்தியா எத்திசை நோக்கிச் செல்கிறது என்பதில் இந்தியர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

இந்தியா எத்திசை நோக்கிச் செல்கிறது என்பதில் இந்தியர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

புது தில்லி: இந்தியா எத்திசை நோக்கிச் செல்கிறது என்பதில் இந்தியர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளின் மூலம் தெரிவித்துள்ளதாவது:

ஜனநாயக குறியீட்டு எண் பட்டியலில் இந்தியா பத்து இடங்கள் கீழிறங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக நடப்பவற்றைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் ஜனநாயகம் இங்கு தொடர்ந்து அரிக்கப்பட்டு வருவதையும், ஜனநாயக அமைப்புகள் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருவதையும் கவனித்திருக்கலாம். இங்கு ஆட்சியில் இருப்பவர்கள்தான் உண்மையிலேயே சிறு சிறு கூ ட்டங்களாக உள்ளனர்.

இந்தியா செல்லும் பாதையானது உலகிற்கு எச்சரிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. இந்தியா எத்திசை நோக்கிச் செல்கிறது என்பதில் நாட்டுப்பற்றுடைய இந்தியர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com