ஆந்திரத்தில் சட்ட மேலவை கலைக்கப்படுகிறதா?

ஆந்திர சட்டப்பேரவையில் உள்ள மேலவையை கலைப்பது குறித்து விவாதிக்க வருகிற திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது.
ஆந்திரத்தில் சட்ட மேலவை கலைக்கப்படுகிறதா?

ஆந்திர சட்டப்பேரவையில் உள்ள மேலவையை கலைப்பது குறித்து விவாதிக்க வருகிற திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது.

ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதத்தின்போது பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, 'ஆந்திர மாநில மக்களின் நலன் கருதியே மூன்று தலைநகர் மசோதா மற்றும் ஆந்திர விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி மசோதா ஆகியவை கீழவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேலவைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், சட்ட மேலவை தலைவர் அந்த மசோதாக்களை தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளார்.

ஏழைக் குழந்தைகளும் ஆங்கில வழிக்கல்வி பயில வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அதனைத் தடுக்கிறார்கள். அரசியல் நோக்கங்களுடன் மட்டுமே செயல்படும் ஒரு அமைப்பு தேவைதானா என்று நாம் சிந்திக்க வேண்டும். மேல்சபையை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமல்ல. மக்களின் நலனுக்காக மாற்றிக்கொள்ளலாம்.

மக்கள் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்கவும், சட்டங்களை இயற்றவும் மேல்சபை அனுமதிக்காவிட்டால், அந்த ஆட்சி மக்களுக்கானதா? இதைப்பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

மேலவைக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால், மக்களின் பணத்தால் செயல்படும் மேலவை, மக்கள் நலத் திட்டங்களை தடுக்கிறது.

நாட்டில் 6 மாநிலத்தில் மட்டுமே மேலவை உள்ளது. ஏற்கனவே, நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் இந்த மேலவை தேவையா? இல்லையா? என்பது குறித்து வருகிற 27ம் தேதி நடைபெறும் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் விவாதித்து முடிவெடுக்க கேட்டுக்கொள்கிறேன்' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com