தில்லி அரசுப்பள்ளிகளுக்கு அமித் ஷா வருகை தர வேண்டும்: கேஜரிவால் அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறிது நேரம் ஒதுக்கி தில்லியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறிது நேரம் ஒதுக்கி தில்லியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லியில் சில சிசிடிவி கேமராக்களை கண்டுபிடித்ததாக அமித் ஷா கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பாக தில்லியில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

அமித் ஷா தனது நிகழ்ச்சி பட்டியலில், சிறிது நேரம் ஒதுக்கி தில்லியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வந்து பார்வையிட வேண்டும். அங்கு சிசிடிவி கேமராக்களை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், 'தில்லி மக்கள் அரசியல் சூழ்நிலையை மாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். தில்லியில் சிசிடிவி, பள்ளிகள் உள்ள பகுதிகளிலும் பாஜக வாக்கு சேகரிக்கலாம்' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com