சட்ட மேலவை கலைப்புக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் மேலவை கலைக்கப்படுவதற்கான முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சட்ட மேலவை கலைப்புக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் மேலவை கலைக்கப்படுவதற்கான முடிவுக்கு ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர சட்டமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்னதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவை மேலவையை கலைப்பதற்கான முடிவுக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டது. 

ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய சில முக்கிய மசோதாக்களை மேலவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதையடுத்து, மேலவையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட ஜெகன்மோகன் முடிவு செய்து, அதற்கான மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதற்கு வசதியாக, ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூட்டப்பட்டு, மேலவை கலைப்பு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையில் இது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதும், அது மத்திய அரசுக்கு அனுப்பி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com