குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. முக்கியமாக, குடியுரிமைச் சட்டத்துக்கு  எதிராக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முன்னதாக குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு பேரணிகளை நடத்தினார். மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய மம்தா, 'இந்த எதிர்ப்பு சிறுபான்மையினருக்காக மட்டுமல்ல. அனைவருக்காகவும்தான். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னிருந்து வழிநடத்திய எனது இந்து சகோதரர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வங்காளத்தில், நாங்கள் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., ஆகியவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தை பதிவு செய்வோம்' என்று பேசினார்.

இதன் மூலமாக கேரளம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை அடுத்து நான்காவதாக மேற்குவங்கத்திலும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com