போராட்டத்தில் கலந்துகொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நலக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
போராட்டத்தில் கலந்துகொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நலக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, லக்னோவில் உள்ள கடிகார கோபுரம் அருகே இஸ்லாமிய மக்கள் பலர் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பெற்றோர்களுடன் பல குழந்தைகளும் பங்கேற்றனர். 

இப்போராட்டத்தில் குழந்தைகள் கலந்துகொண்டதற்கு 'குழந்தைகள் நலக்குழு' கண்டனம் தெரிவித்துள்ளது. லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே, குழந்தைகளை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

'குழந்தைகள் இந்த வயதில் அவர்களது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பல குழந்தைகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளவில்லை. இது குழந்தைகளிடையே ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும்' என்று குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் சங்கீதா சர்மா நோட்டீஸில் தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் நலக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும், குழந்தைகளின் நலன் கருதி மாநில காவல்துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இறுதியாக, இனியும் குழந்தைகளை போராட்டத்திற்கு அழைத்து வந்தால், சிறார் சட்டத்தின் 75வது பிரிவின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் குழந்தைகள் நலக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com