சென்னை உள்பட 6 புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்!

2023ஆம் ஆண்டுக்குள்ளாக நாடு முழுவதும் புல்லட் ரயில் சேவையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை உள்பட 6 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

2023ஆம் ஆண்டுக்குள்ளாக நாடு முழுவதும் புல்லட் ரயில் சேவையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை உள்பட 6 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளார். புல்லட் ரயில் செயல்திட்ட வரைவு இறுதி செய்யப்பட்டவுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்தத் தகவலை இந்திய ரயில்வேத்துறை தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார்.

இதன்மூலம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில் அதிவிரைவு (300 கி.மீ. வேகம்) அல்லது மித அதிவிரைவு (160 முதல் 250 கி.மீ. வரையிலான வேகம்) புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

  • தில்லி - நொய்டா - லக்னௌ - வாராணசி (865 கி.மீ.)
  • தில்லி - ஜெய்பூர் - உதய்பூர் - ஆமதாபாத் (886 கி.மீ.)
  • மும்பை - நாசிக் - நாகபுரி (753 கி.மீ.)
  • மும்பை - புணே - ஹைதராபாத் (711 கி.மீ.)
  • சென்னை - பெங்களூரு - மைசூரு (435 கி.மீ.)
  • தில்லி - சண்டிகர் - லூதியானா - ஜலந்தர் - அமிர்தசரஸ் (459 கி.மீ.)

முதல்கட்டமாக மும்பை - ஆமதாபாத் இடையிலான வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 90 சதவீதம் எளிதில் முடிவடையும் என ரயில்வேத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்பணிகள் முழுவதும் முடிவடைந்த அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக புல்லட் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 508 கி.மீ. பயண தூரம் 2 மணிநேரமாகக் குறையவுள்ளது. இது விமானப் போக்குவரத்துக்கு இணையான பயண நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com