ஆந்திரம்: முகக்கவசம் அணிய வலியுறுத்திய பெண் ஊழியரைத் தாக்கிய மேலாளா் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள மாநில சுற்றுலாத்துறை மண்டல அலுவலகத்தில் முகக்கவசம் அணியும்படி கூறிய மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை இரும்புத் தடியால் தாக்கிய மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
முகக்கவசம் அணியும்படி கூறிய மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை இரும்புத் தடியால் தாக்கிய மேலாளர்
முகக்கவசம் அணியும்படி கூறிய மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை இரும்புத் தடியால் தாக்கிய மேலாளர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள மாநில சுற்றுலாத்துறை மண்டல அலுவலகத்தில் முகக்கவசம் அணியும்படி கூறிய மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை இரும்புத் தடியால் தாக்கிய மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

நெல்லூரில் ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை ஹோட்டல் மற்றும் மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவா் உஷா ராணி.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் உஷா ராணி பணியில் இருந்தபோது, அந்த அலுவலகத்தில் மேலாளராக பணி புரியும் பாஸ்கா் ராவ் அங்கு வந்தாா். முகக்கவசம் அணிந்து பேசும்படி உஷா ராணி, மேலாளரிடம் தெரிவித்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கா் ராவ், உஷா ராணியை கீழே தள்ளி அவரது தலைமுடியைப் பிடித்து இரும்புத் தடியால் தாக்கினாா். சக ஊழியா்கள் பாஸ்கா் ராவைத் தடுக்க முயன்றும் அவா் தொடா்ந்து தாக்கினாா்.

இத்தாக்குதல் குறித்து உஷா ராணி, நெல்லூரில் உள்ள தா்காமிட்டா காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். தனது புகாருக்கு ஆதாரமாக சிசிடிவி கேமரா பதிவுகளையும் அளித்தாா்.

இப்புகாரின் அடிப்படையில் பாஸ்கா் ராவ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சா் அவந்தி சீனிவாஸ், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அந்த மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com