தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்தாலும் மனநிறைவுக்கு இடமில்லை: கேஜரிவால்

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து நிலைமை மேம்பட்டாலும் மனநிறைவுக்கு இடமில்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து நிலைமை மேம்பட்டாலும் மனநிறைவுக்கு இடமில்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 

தில்லியில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். இது ஒரு நல்ல அறிகுறி. தில்லியில் 100 பேரில் 31 பேருக்கு என்ற விகிதத்தில் கரோனா தொற்று உறுதி ஆகி வருகிறது. 

கடந்த சில நாள்களாக தில்லியில் நிலைமை மேம்பட்டு வருகிறது. இருப்பினும், மனநிறைவு இல்லை. வைரஸ் பரவல் குறித்து கணிக்க முடியாது. எனவே, எங்கள் முயற்சிகளை அதிக வீரியத்துடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஜூன் 30 ஆம் தேதிக்குள் தில்லியில் 1 லட்சம் பேருக்கு பாதிப்பு, அதில் 60,000 பேர் சிகிச்சையில் இருப்பதாக கணிக்கப்பட்டது. தற்போது 26,000 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது அனைவரின் கடின உழைப்பின் விளைவாகும். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தில்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று கருதப்பட்டது. அதேபோன்று 15,000 படுக்கை வசதிகள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5,800 நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 38 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 64 சதவீதமாக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் தற்போது குறைந்துள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com