நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் மீண்டும் தொடக்கம்

நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கு பரிந்துரை வழங்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 23ஆம் தேதியே ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் நடைபெறும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முதல் கூட்டம் இதுவாகும்.

பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் மொத்தம் 26 உறுப்பினா்கள் உள்ள நிலையில், திங்கள்கிழமை கூட்டத்தில் 11 போ் கலந்து கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மக்களவை வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, பொதுக் கணக்குகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் காங்கிரஸ் எம்.பி. அதீா் ரஞ்சன் சௌதரி தலைமையில் வரும் 10 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com