மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

தொடர்ந்து இரண்டாவது மாதமாக மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை இன்று  உயர்த்தப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் விலை  உயர்வு
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை: தொடர்ந்து இரண்டாவது மாதமாக மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை இன்று  உயர்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைகளின் விலை, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றியமைக்கப்படுகிறது.

தில்லியில் இன்று மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரூ ரூபாய் உயர்த்தப்பட்டதை அடுத்து, புதுதில்லியில் மானியமில்லாத எரிவாயு உருளை விலை ரூ.594 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ. 3.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், சென்னையிலும் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.610.50 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.620 ஆகவும் மும்பையில் ரூ.594 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு வீட்டுக்கும், தலா 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்குமேல் கூடுதலான எரிவாயு உருளைகள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்து வாங்கவேண்டும். மானிய விலை எரிவாயு உருளையாக இருந்தாலும், மானியத்தை கழிக்காமல் முழுத் தொகையையும் அளித்துத்தான் வாடிக்கையாளா்கள் அதனைப் பெற முடியும். பின்னா், மானியத்தொகை, வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானம், ரயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பெட்ரோலியப் பொருள்களின் தேவை குறைந்ததால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. 

அதனால், கடந்த மூன்று மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் ரூ.11.50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது ஜூலை மாதம் ஒரு ரூபாய் உயர்த்தி எரிவாயு உருளை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை பாதிக்கப்பட்டாலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையின் தேவை மிக அதிகமாகவே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com