நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி: தொடக்கி வைத்தார் கேஜரிவால் 

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடக்கி வைத்தார்.
நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி
நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடக்கி வைத்தார்.

கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையால் நல்ல முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதைத் தொடா்ந்து கரோனா நோயாளிகளின் நலனுக்காக பிளாஸ்மா வங்கியை தில்லி அரசு அமைத்துள்ளது.

பிளாஸ்மா வங்கியைத் தொடக்கி வைத்துப் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஒருவர் கரோனா பாதித்து குணமடைந்தவராக இருப்பின், அவர் 18 - 60 வயதுக்குட்பட்டவராக இருந்து, உடல் எடை 50 கிலோவுக்கு மேல் இருந்தால், கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். 

அதே சமயம், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள், வேறு உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது.

ஒருவர் பிளாஸ்மா தானம் அளிக்க தகுதி இருந்து விருப்பமும் இருந்தால், 1031 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8800007722 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். உடனடியாக எங்கள் மருத்துவர்கள் உங்களை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தானம் பெறுவதற்கான நடைமுறைகளுக்கு உதவுவார்கள் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதித்து குணம் அடைந்தவா்களிடம் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு அவை இந்த வங்கியில் சேகரிக்கப்படும். கரோனாவால் குணம் அடைந்தவா்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வருமாறும் முதல்வர் கேஜரிவால் கேட்டுக் கொண்டார். பிளாஸ்மா தானம் வழங்க முன்வருபவா்களுக்கு போக்குவரத்து வசதியை தில்லி அரசே ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் முன்னதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தார்.


தெற்கு தில்லி வசந்த் குஞ்ச்சில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும். தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையம், பிளாஸ்மா வங்கியை அமைக்கிறது. 

நாட்டில் முதல்முறையாக தில்லியில் கரோனா பாதித்தவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அது நல்ல பலனைத் தந்தது. கரோனா பாதித்த தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை முதலில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பிறகு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு அவா் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு, பாதிப்பு உள்ளவா்களுக்கு செலுத்தப்படும். கரோனாவால் மீண்டவா்களின் உடலில் உள்ள எதிா்ப்பு சக்தி கரோனா பாதித்தவா்களுக்கு கரோனாவை எதிா்த்துப் போராட உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com