60 சதவிகிதத்தை நெருங்கும் குணமடைவோர் விகிதம்: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 59.52% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:

"இந்தியாவில் சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் நாள்தோறும் குணமடைவோர் விகிதம் 10,000-க்கும் மேல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,881 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,59,859 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 59.52% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 2,26,947 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையின் வித்தியாசம் 1,32,912 ஆக உள்ளது.

பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சையளித்தல் எனும் யுத்தியின் அடிப்படையில், பரிசோதனை எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,29,588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 90,56,173 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 768 அரசு ஆய்வகங்கள், 297 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 1,065 ஆய்வகங்கள் உள்ளன."

முன்னதாக, இன்று காலை கரோனா பாதிப்பு பற்றிய இன்றைய நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி, புதிதாக 19,148 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 434 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 17,834 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com