இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

இந்தியாவில் திங்கள்கிழமை மதியம் நிலவரப்படி ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது
இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது
புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை முற்பகல் நிலவரப்படி ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை நிலவரப்படி 7 லட்சத்தை எட்டும் நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை ஒரு கோடியை எட்டிவிட்டது.

நேற்று ஒரே நாளில் நாட்டில் 24,248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 6,97,413 ஆக உயர்ந்துள்ளது.

ஐசிஎம்ஆர் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், திங்கள்கிழமை முற்பகல் 11 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 1,00,04,101 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com