இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 20,642 -ஆக உயர்வு 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு  7,42, 417-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 20,642 -ஆக உயர்வு 

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு  7,42, 417-ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 22,752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 482 போ் உயிரிழந்தனா்.

புதன்கிழமை காலை வரையிலான  24 மணி நேரத்தில் நாட்டில் 22,752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,42,417-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 482 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20,642 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்றுக்காக  2,64,944 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,56,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டவா்கள் ஆவா்.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கரோனா 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அடுத்த 49 நாட்களில் 6 லட்சம் பேரை தாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்பு: 7,42,417
பலி: 20,642
குணமடைந்தோர்: 4,56,831
சிகிச்சை பெற்று வருவோா்: 2,64,944

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com