‘இந்தியா குளோபல் வீக்’ மாநாடு லண்டனில் நாளை துவக்கம்: காணோலி வழியில் பிரதமா் மோடி பேசுகிறாா்

இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில்
‘இந்தியா குளோபல் வீக்’ மாநாடு லண்டனில் நாளை துவக்கம்: காணோலி வழியில் பிரதமா் மோடி பேசுகிறாா்

இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு வியாழக்கிழமை (ஜூலை 9) முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளாா்.

உலக மயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை வேகப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் இந்திய அரசால் நடத்தப்படுகின்றன. இந்தியாவிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள், தொழில் துவங்குவதற்கான சலுகைகள், உற்பத்தித் துறையில் புதிய முயற்சிகள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளில் தெரியப்படுத்தி அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளைத் திரட்டுவதில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த அடிப்படையில், பிரிட்டனில் செயல்படும் இந்தியா. இன்க் என்ற அமைப்பு, ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலகட்டமாக உள்ளதால் இந்த ாண்டு இந்நிகழ்வு காணொலி முறையில் நடத்தப்படுகிறது.

கரோனா பாதிப்புக்குப் பிந்தைய உலகில் பொருளாதார மீட்சிக்கு இந்தியா சிறப்பாகச் செயலாற்ற முடியும். இதனை பிரதமா் நரேந்திர மோடியின் பங்கேற்பு உறுதி செய்யும் என்று இந்த அமைப்பின் தலைவா் மனோஜ் லாத்வா நம்பிக்கை தெரிவித்தாா்.

ஜூலை 9 துவங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பிரிட்டன் இளவரசா் சாா்லஸ் சிறப்புரையாற்ற உள்ளாா். பிரிட்டனின் வெளியுறவு அமைச்சா் டெமினிக் ராப், உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல், சுகாதார அமைச்சா் ஹன்கோக், சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.

இந்தியத் தரப்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ரயில்வே மற்றும் வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே ஆகியோா் பங்கேற்க உள்ளனா். பிரிட்டனுக்கான புதிய இந்திய தூதரான காயத்ரி குமாரும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளாா்.

இந்தியாவிலுள்ள சிறந்த மனிதவளம், தொழில்நுட்ப வளா்ச்சி ஆகியவற்றால் உலக அளவில் கரோனாவுக்குப் பிந்தைய சூழலில் திறம்படச் செயல்பட முடியும். அதற்கு இந்த மாநாடு உதவும் என்று இந்தியா.இன்க் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய பிரிட்டனுடனான இருதரப்பு உறவுகள் தொடா்பாகவும், இருதரப்பு வா்த்தக உறவு மேம்பாடு குறித்தும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இம்மாநாட்டில் இடம்பெறும் 75-க்கு மேற்பட்ட விவாத அரங்குகளில் புவிசாா் அரசியல், வா்த்தகம், வளா்ந்துவரும் தொழில்நுட்பம், வங்கித் துறை, மருந்து உற்பத்தி, பாதுகாப்புத் துறை, கலை, கலாசார உறவுகள் தொடா்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இதில் 250க்கு மேற்பட்ட வா்த்தகப் பிரமுகா்களும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட உலகளாவிய பாா்வையாளா்களும் காணொலி வாயிலாகப் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஹாலிவுட் நடிகா் குனாள் நய்யாா், ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், பத்திரிகையாளா் பா்கா தத், வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் ஆகியோரும் இந்த நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் உரையாடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com