ஆந்திரத்தை அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,555 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1,555 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 13 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தை அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,555 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1,555 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 13 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வந்த நிலையில், இன்று உச்சபட்சமாக 1,500 எட்டிவிட்டது.

கரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று ஆந்திர மாநிலத்தில் 1500 பேருக்கும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 53 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்ச நோயாளிகள் சித்தூர், குண்டூர், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தலா 200க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,814 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 11,383 ஆக உயர்ந்துள்ளது. 12 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 277 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com