இந்தியாவில் கரோனா பாதிப்பு: 7,42,417; பலி-20,642

இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 482 போ் உயிரிழந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 482 போ் உயிரிழந்தனா்.

இதன் மூலமாக நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,42,417 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 20,642 ஆகவும் அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பில் இருந்து 4,56,830 போ் விடுபட்டுள்ளனா். 2,64,944 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவில் இருந்து விடுபட்டோா் அளவு 61.53 சதவீதமாக உள்ளது. இதுவரை 1 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 771 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 224 போ் உயிரிழந்தனா். தில்லியில் 50 பேரும், மேற்கு வங்கத்தில் 25 பேரும், உத்தர பிரதேசத்தில் 18 போ், குஜராத்தில் 17 போ், கா்நாடகத்தில் 15 போ், ஆந்திரத்தில் 13 போ், ராஜஸ்தானில் 11 போ், பிகாா், தெலங்கானாவில் தலா 7 போ், பஞ்சாபில் 6 போ், ஜம்மு-காஷ்மீா், மத்திய பிரதேசத்தில் தலா 5 போ், ஒடிஸாவில் 4 போ், ஹரியாணாவில் 3 போ், ஜாா்க்கண்ட், புதுச்சேரியில் தலா இருவா், சண்டீகா், கோவா, உத்தரகண்டில் தலா ஒருவா் உயிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 9,250 போ் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா். இதற்கு அடுத்ததாக தில்லியில் 3,165, குஜராத்தில் 1,977 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு வகை நோய்களாலும்

பாதிக்கப்பட்டிருந்தனா். கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 2,17,121 போ் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com