சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்குத் தடை: எதிர்க்கும் மனு செவ்வாயன்று விசாரணை?

சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவானது செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவானது செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவானது செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

புது தில்லி: சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவானது செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ராணுவ நுண்ணறிவுப் பிரிவின் தலைமை இயக்குநர் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவு ஒன்றின்படி, ராணுவ வீரர்கள் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள தங்களது கணக்குகளை நீக்க வேண்டும் என்றும், அத்துடன் குறிப்பிட்ட 69 இணையதளங்களை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தகவல் திருட்டினைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது  என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த உத்தரவை எதிர்த்து ராணுவத்தில் லெப்டினன்ட் கலோனியல் ஆக பணிபுரியும் பி.கே.சவுத்ரி என்னும் அதிகாரி தனது வழக்கறிஞர்களான ஷிவாங்க் பிரதாப் சிங் மற்றும் சனந்திகா பிரதாப் சிங் ஆகியோர் மூலம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். ராணுவ நுண்ணறிவுப் பிரிவின் தலைமை இயக்குநரின் உத்தரவைத் திரும்பப் பெறுமாறு ஆணையிடக் கோரியுள்ள அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

ராணுவ வீரர்கள் தங்களது வீடுகளில் இருந்து, குடும்பத்தை விட்டு விலகி, வெகு தொலைவில் எளிதில் அணுக முடியாத இடங்களில் பணிபுரிகிறார்கள். அதேசமயம் எந்த  சமயத்திலும் எதிரியினால் தாக்கப்படும் அபாயத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். இவையனைத்தும் அவர்களின் உடல் மற்றும் மன நலனில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.    

அப்படியான தருணங்களில் தங்களது குடும்பத்துடனான உறவை, அங்கு நிகழும் பிரச்சினைகளை, நேரில் இருக்க இயலாத   சூழ்நிலைகளை எதிர்கொள்ள அவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை சார்ந்திருக்கிறார்கள். அதிவேக இணைய வசதியும், தொலைதொடர்புக் கருவிகளும் இதனை சாத்தியமாக்கி இருக்கின்றன. இதன்மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது.

இந்த சூழ்நிலையில் இப்படியான தடை உத்தரவு என்பது அரசியல் சாசனத்தின்படி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவர்களின் அடிப்படை  உரிமைகளை மீறுவதாகும்.

பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தகவல் திருட்டினைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகள் என்றால், ராணுவ வீரர்களை விட அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை கையாளுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இதில் எந்த விதமான தடையும் இல்லையே?

எனவே அடிப்படை உரிமைகளை மீறும் இந்த உத்தரவினைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com