
Andhra Pradesh update
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1,916 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தை எட்டிவிட்டது.
சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின்படி,
இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்து 42 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 408 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்துவந்த நிலையில், இன்று உச்சபட்சமாக 1,916-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 33,019 ஆக உள்ளது.
நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 15,144 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 17,467 பேர் குணடைந்துள்ளனர்.