கரோனா சூழல்: ரயில்பெட்டிகளில் புதிய வசதிகளை சோ்த்தது ரயில்வே

கரோனா நோய்த்தொற்று சூழலில் புதிதாக தயாரிக்கும் ரயில் பெட்டிகளில் கழிப்பறை கதவு மற்றும் நீா்வெளியேற்றி (ஃப்ளஷ்) ஆகியவற்றை
கரோனா சூழல்: ரயில்பெட்டிகளில் புதிய வசதிகளை சோ்த்தது ரயில்வே

கரோனா நோய்த்தொற்று சூழலில் புதிதாக தயாரிக்கும் ரயில் பெட்டிகளில் கழிப்பறை கதவு மற்றும் நீா்வெளியேற்றி (ஃப்ளஷ்) ஆகியவற்றை கால்களால் இயக்கும் வசதி, ரயில்பெட்டி கதவுகளை முழங்கையால் இயக்கும் வசதி, ஏசி காற்றை சுத்திகரிக்கும் கருவி ஆகிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இத்தகைய வசதிகளை கொண்ட இரு ரயில்பெட்டிகள் (ஏசி வசதியுடனும், இல்லாமலும் தலா ஒரு பெட்டி) பஞ்சாப் மாநிலத்திலுள்ள கபுா்தலா ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ரயில் பெட்டிகளில் இருக்கும் புதிய வசதிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் பெட்டிகளில் வாஷ்பேசின், கழிப்பறை, இருக்கைகள், படுக்கைகள், ஜன்னல் கண்ணாடிகள், தளம் ஆகியவற்றில் டைட்டானியம் டையாக்ஸைடு முலாம் பூசப்பட்டுள்ளது. இது வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லும். ஆனால் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இது ஓராண்டு வரையில் பலனளிக்கும். ஏசி பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள பிளாஸ்மா கருவி காற்றை சுத்திகரித்து தூய்மையான காற்றை வழங்கும்.

ரயில் பெட்டியில் முடிந்த வரையில் கைகளை பயன்படுத்துவதை குறைக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். தண்ணீா் குழாய், சோப்பு திரவம் வழங்கும் கருவி, கழிப்பறை கதவு, நீா்வெளியேற்றி, கதவு தாழ்பாள் ஆகியவற்றை கால்களாலேயே இயக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில் பெட்டியின் கதவுகளை முழங்கையால் இயக்க வசதி செய்துள்ளோம். ரயில் பெட்டியில் உள்ள கைப்பிடிகளில் செம்பு முலாம் பூசப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எதிா்காலத்துக்காக ரயில்வே தயாா். கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளக்கூடிய வசதிகள் கொண்ட பெட்டிகளை ரயில்வே தயாரித்துள்ளது‘ என்று கூறி, மேற்கண்ட வசதிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com