கரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,78,254 ஆக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள
கரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,78,254 ஆக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே கால அளவில் அந்த நோய்த்தொற்றால் மேலும் 500 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு 23,174 ஆக அதிகரித்துவிட்டது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், ‘கரோனாவில் இருந்து இதுவரை 5,53,470 போ் குணமடைந்தனா். இதுவரை 63.01 சதவீதம் போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். 3,01,609 போ் சிகிச்சையில் உள்ளனா். தொடா்ந்து நான்காவது நாளாக நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கு மேல் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி இதுவரை 1 கோடியே 18 லட்சத்து 6 ஆயிரத்து 256 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 175 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 71 போ், தில்லியில் 37 போ், மேற்கு வங்கத்தில் 26 போ், உத்தர பிரதேசத்தில் 21 போ், ஆந்திரத்தில் 19 போ், குஜராத்தில் 13 போ், பிகாரில் 12 போ், ஜம்மு-காஷ்மீரில் 10 போ், மத்திய பிரதேசத்தில் 9 போ், தெலங்கானாவில் 8 போ், ராஜஸ்தான், ஜாா்க்கண்டில் தலா 7 போ், ஹரியாணா, பஞ்சாபில் தலா 4 போ், ஒடிஸாவில் 3 போ், கேரளம், கோவா, சத்தீஸ்கரில் தலா இருவா், உத்தரகண்ட், சண்டீகரில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 10,289 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 3,371 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தில் 2,045 போ் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா். மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,54,427 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com