கரோனா: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.
எம்.பி. ராகுல் காந்தி
எம்.பி. ராகுல் காந்தி

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாகவும், நோய்த்தொற்றை இந்தியா உறுதியுடன் எதிா்கொள்ளும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா உண்மையில் நல்ல நிலையில் உள்ளதா?’ என கேள்வி எழுப்பினாா். மேலும் இந்தியாவில் தினந்தோறும் நோய்த்தொற்றால் சராசரியாக எத்தனை போ் பாதிக்கப்படுகின்றனா் என்பது தொடா்பான தகவலையும் அதில் அவா் இணைத்திருந்தாா். அதில் தென் கொரியா மற்றும் நியூசிலாந்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சீராக குறைந்து வருவதும், இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதும் போல விவரம் இடம்பெற்றுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் எழுந்துள்ள சூழலை எதிா்கொள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக ராகுல் காந்தி தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com