பஞ்சாப்புக்கு வந்து 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால்..: தனிமைப்படுத்தல் இல்லை

இதர மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து வெறும் 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால், 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால்..: தனிமைப்படுத்தல் இல்லை
பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால்..: தனிமைப்படுத்தல் இல்லை


சண்டிகர்: இதர மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து வெறும் 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால், 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

அதாவது, மாநிலத்துக்கு வந்து தேர்வெழுதும் மாணவர்களுக்கும், தொழில் ரீதியாக மற்றும் இதர காரணங்களுக்காக பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து ஓரிரு நாள்களில் வெளியேறிவிடும் பயணிகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் அவர்கள் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் COVA செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தங்களது பயணம் முழுக்க அந்த செயலி பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com