கோவாவில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு: புதிதாக 157 பேருக்குத் தொற்று

கோவாவில் புதிதாக 157 பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 55 வயது மூதாட்டி ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். 
Goa COVID-19 reports
Goa COVID-19 reports


பனாஜி: கோவாவில் புதிதாக 157 பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 55 வயது மூதாட்டி ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். 

சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி.. 

கோவா மாநிலத்தில் 1,272 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,817 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

புதன்கிழமை மட்டும் 5,812 பேருக்குப் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 2001 பேருக்குத் தொற்று இல்லை என்றும், அதே நேரத்தில் 3,654 பேரின் முடிவுகள் காத்திருக்கின்றன.

வைரஸ் தொற்று காரணமாக வாஸ்கோவைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் இறந்ததால் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com