உலகளவில் 10 லட்சம் பேரில் 77 பேர் பலியானால், இந்தியாவில் 20 பேர்தான் பலியாகின்றனர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

​இந்தியாவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 20 பேர் கரோனா தொற்றால் பலியாவதாகவும், இதுவே உலகளவிலான சராசரியின்படி 77 பேர் பலியாவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 20 பேர் கரோனா தொற்றால் பலியாவதாகவும், இதுவே உலகளவிலான சராசரியின்படி 77 பேர் பலியாவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) தில்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தெரிவிக்கப்பட்டதாவது:

"19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 லட்சம் பேரில் சராசரியாக 140 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. தீவிர பரிசோதனையே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதத்தைக் குறைக்கும். 

கரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் 2.43 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் கரோனா தொற்றால் பலியாவோர் எண்ணிக்கை உலகின் சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 20.4 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகின்றனர். இதுவே உலகளவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 77 பேர் பலியாகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com