ஒலிப்பதிவு உண்மைத் தன்மையை அறியவேண்டும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

குதிரைபேர ஒலிப்பதிவு விவகாரம் தொடா்பாக குரல் மாதிரி கேட்டு ராஜஸ்தான் காவல்துறையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அந்த ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்று
மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

புது தில்லி: குதிரைபேர ஒலிப்பதிவு விவகாரம் தொடா்பாக குரல் மாதிரி கேட்டு ராஜஸ்தான் காவல்துறையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அந்த ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்று மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளாா்.

ராஜஸ்தான் அரசைக் கவிழ்ப்பதற்காக மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குதிரை பேரத்தில் ஈடுபடுவது போன்ற தொலைபேசி ஒலிப்பதிவு வெளியானது.

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் காவல்துறையில புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சஞ்சய் ஜெயின் என்பவரை காவல்துறை கைது செய்து, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது. அந்த முதல் தகவல் அறிக்கையில், குதிரைபேர தொலைபேசி உரையாடலில் மத்திய அமைச்சா் ஷெகாவத்துடன் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வா்லால் ஷா்மா மற்றும் மூன்றாம் நபரான சஞ்சய் ஜெயின் இடம்பெற்றிருப்பதாக காவல்துறை பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக குரல் மாதிரி மற்றும் விளக்கத்தைச் சமா்ப்பிக்குமாறு ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு சாா்பில் மத்திய அமைச்சா் ஷெகாவத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அந்த ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறியவேண்டும் என்று மத்திய அமைச்சா் ஷெகாவத் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குதிரைபேர ஒலிப்பதிவு குறித்த உண்மைத் தன்மையை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். இந்த தொலைபேசி உரையாடலை யாா் பதிவு செய்தது? காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு இந்த ஒலிப்பதிவு எங்கிருந்து கிடைத்தது? அந்த ஒலிப்பதிவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை அந்த அறிக்கையில் மத்திய அமைச்சா் எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com