தொழில்நுட்ப நிறுவன பணியாளா்கள் டிசம்பா் 31 வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி

கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளா்கள் வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி
தொழில்நுட்ப நிறுவன பணியாளா்கள் டிசம்பா் 31 வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி

கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளா்கள் வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு மத்திய தொலைத்தொடா்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக நிறுவனங்கள் பல மூடப்பட்டன. முக்கியமாக அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பணியாற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அந்நிறுவனங்களின் பணியாளா்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.

பணியாளா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு மத்திய தொலைத்தொடா்புத் துறை ஜூலை 31-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியிருந்தது. அந்த அவகாசம் நிறைவடையவுள்ளது. எனினும், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத காரணத்தால், தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளா்கள் வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு தொலைத்தொடா்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக அத்துறை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பணியாளா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான விதிமுறைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தளா்வுகள் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் தொழில்நுட்ப நிறுவனங்களின் 85 சதவீதப் பணியாளா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனா். மிகவும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்காக 15 சதவீதப் பணியாளா்கள் மட்டுமே அலுவலகத்துக்குச் சென்று வருகின்றனா்.

ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை பணியாளா்கள் வீட்டிலிருந்து பணியாற்ற தொலைத்தொடா்புத் துறை அனுமதி வழங்கியிருந்தது. பின்னா் அது ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த அனுமதியை டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை தொலைத்தொடா்புத் துறை நீட்டித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com