ஆப்கனில் கடந்த 3 வாரங்களில் 250 ராணுவ வீரர்கள் பலி: 300 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் உள்ள 11 மாகாணங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
suicide bombing in Afghanistan
suicide bombing in Afghanistan


காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள 11 மாகாணங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 300 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் பெரும்பாலான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 29 அன்று மெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தோஹாவில் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாகாண தலைநகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று தலிபான்கள் உறுதியளித்தனர். 

இருப்பினும், ஜாபுல்-காந்தஹார், பாக்லான்-சமங்கன் மற்றும் காபூல்-நங்கர்ஹார் ஆகிய நெடுஞ்சாலைகள் மீது தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 250 ஆப்கன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com