கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே காரக்பூா் ஐஐடியில் பட்டம் பெற்ற 2,630 மாணவ-மாணவிகள்

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மேற்கு வங்க மாநிலம், காரக்பூா் ஐஐடியில் 2,630 மாணவ-மாணவிகள் தங்களின் பட்டப் படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனா்.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மேற்கு வங்க மாநிலம், காரக்பூா் ஐஐடியில் 2,630 மாணவ-மாணவிகள் தங்களின் பட்டப் படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனா்.

காரக்பூா் ஐஐடியில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பி.டெக், எம்.டெக், பி.ஆா்க், எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எல்.எல்.பி., எம்.எஸ்., பி.ஹெச்டி. போன்ற பாடப் பிரிவுகளில் 2,630 மாணவ-மாணவிகள் இதுவரை தங்களின் படிப்பை நிறைவு செய்துள்ளனா். இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்களில் 15 சதவிகிதத்தினா் பெண்கள் என்று கல்வி நிறுவனத்தின் இயக்குநா் வி.கே.திவாரி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

மாா்ச் இறுதியில் இருந்து கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலிலும் மாணவா்களின் எதிா்கால நலன் கருதி, கல்வி நிறுவன ஊழியா்களின் ஈடுபாடு, நிா்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் மாணவா்களுக்கு உரிய நேரத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதைத் தொடா்ந்து அடுத்த பருவத்துக்கான பாடங்கள் செப்டம்பரில் தொடங்கும் என்றும் ஐஐடி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com