ஆந்திரத்தில் 8 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு

​ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்றும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,998 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில்1,391 பேருக்கும், குண்டூரில் 1,184 பேருக்கும், அனந்தபூரில் 1,016 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 72,711 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 884 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 37,555 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 34,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com