அசாம் வெள்ளம்: திப்ருகர் நிவாரண முகாம்களில் 95க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அசாம் மாநிலம் திப்ருகர் அருகிலுள்ள ரங்மோலா மற்றும் மிரி கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நிலையில் சுமார் 95 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருகின்றன.
திப்ருகரில் நிவாரண முகாம்களில் வாழும் 95 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
திப்ருகரில் நிவாரண முகாம்களில் வாழும் 95 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அசாம் மாநிலம் திப்ருகர் அருகிலுள்ள ரங்மோலா மற்றும் மிரி கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நிலையில் சுமார் 95 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருகின்றன.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் கூறுகையில், "எனது கிராமம் முகாமில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தற்போது அந்த கிராமம் முழுவதும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 95 குடும்பங்கள் அங்கு வசித்து வந்தோம். நாங்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், 120 க்கும் மேற்பட்ட வீடுகள் பிரம்மபுத்ரா நதியில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, நாங்கள் அனைவரும் அரசு ஏற்படுத்தி தந்துள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். நிவாரண முகாம்ங்களை அரசு காலி செய்யும் சூழல் ஏற்படும்போது நாங்கள் எங்கு செல்வோம் என்று தெரியவில்லை” என்று கூறினார். 

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 மாவட்டங்கள் பாதித்துள்ளது. ஜூலை 22 வரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 26,31,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பார்பேட்டா, திப்ருகார், கோக்ராஜார், பொங்கைகான், டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை, முதற்கட்டமாக அசாமுக்கு வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.346 கோடியை விடுவிப்பதாக மத்தியக்குழு அறிவித்துள்ளது, மேலும் மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மீண்டும் வரும் வெள்ள பிரச்னையை தீர்க்க பூட்டானுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com