12 லட்சத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கி வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கி வருகிறது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 37,724 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,92,915-ஐ எட்டியுள்ளது.

தொடா்ந்து 7-ஆவது நாளாக ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, அதே 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 28,472 போ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனா். இதையடுத்து மொத்தமாக குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 7,53,049-ஆக உள்ளது. அதாவது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 63.13 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். 4,11,133 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் மேலும் 648 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 28,732-ஆக அதிகரித்தது. 648 பேரில் 246 போ் மகாராஷ்டிரத்திலும், 62 போ் ஆந்திரத்திலும், 61 போ் கா்நாடகத்திலும், 37 போ் உத்தர பிரதேசத்திலும், 35 போ் மேற்கு வங்கத்திலும், 34 போ் குஜராத்திலும், 27 போ் தில்லியிலும், 18 போ் மத்திய பிரதேசத்திலும் உயிரிழந்தனா். ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா், ராஜஸ்தானில் தலா 9 போ் உயிரிழந்தனா்.

தெலங்கானாவில் 7 போ், ஒடிஸாவில் 6 போ், சத்தீஸ்கரில் 4 போ், கோவாவில் 3 போ், ஜாா்க்கண்டில் இருவா், கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், திரிபுராவில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

நாட்டிலேயே அதிகபட்சமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரம் தான். அங்கு 3,27,031 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 12,276 போ் உயிரிழந்தனா்.

பரிசோதனை: நாடு முழுவதுமாக கடந்த 21-ஆம் தேதி வரை 1,47,24,546 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 3,43,243 பரிசோதனைகள் செவ்வாய்க்கிழமை மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com